
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட அமீர் கான், விஷ்ணு விஷால்
சென்னையில் உள்ள காரப்பாக்கத்தில் இருக்கும் தன் வீட்டிலிருந்து விஷ்ணு விஷால் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக காலையில் டுவீட் செய்திருந்தார். அதன்பிறகு அவரை மீட்புப் படையினர் மீட்டனர். விஷ்ணு விஷால், அவரது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் அமீர் கான் உள்ளிட்டவர்கள் அப்போது மீட்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் மீட்புக் குழுவினர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து விஷ்ணு விஷால் தான் மீட்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!