
ஏரி உடைப்பு : நடிகை நமீதா வீட்டில் 6 அடி வெள்ளம் : இரட்டை குழந்தையுடன் தவிப்பு
இங்கு தான் நடிகை நமீதா குடியிருக்கிறார். வெள்ளம் 6 அடி அளவுக்கு அவரது வீட்டிற்குள்ளும் புகுந்தது. ஒரு வயதான இரட்டைக் குழந்தைகளுடன் தவித்து வருகிறார். இதுவரை, இங்கு சிக்கி உள்ளவர்களை காப்பாற்றுவதற்கு யாரும் வரவில்லை.
நாராயணபுரம் ஏரி உடைந்ததால், அந்த பகுதியை சுற்றிலும் உள்ள பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. பள்ளிக்கரணை ஆனந்த் நகர் எக்ரட் பார்க்கில் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு இருப்பவர்கள் தப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்பகுதியில் இருப்பவர்களை மீட்க இதுவரை மீட்பு குழுவினர் வரவில்லை. வயதானவர்கள் சிக்கி கொண்ட நிலையிலும் உதவிக்கு ஒருவரும் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!