
ஆரவ்விற்கு ஜோடியாகும் ரம்யா பாண்டியன்
ஜன 14, 2023
ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சோசியல் மீடியாவை கலக்கி வரும் ரம்யா பாண்டியன், தற்போது தேன் என்ற படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் உதயநிதி நடித்த கலகத்தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 1996ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!