
மாமனிதன் பார்த்துப் பாராட்டிய ரஜினிகாந்த்
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகர் ஆர்கே சுரேஷ் வாங்கியுள்ளார். இப்படம் குறித்த ஒரு அப்டேட்டை படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டிய பதிவுதான் அது. “ஜனவரியில் மாமனிதன் படம் பார்த்து பாராட்டி,நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை. அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள் நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன். இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்பனையாவும் முடிந்தது சார். நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார். படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிந்த பிறகே இந்தப் பதிவை சீனு வெளியிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!