
ஜாலி ஓ ஜிம்கானா : பூஜா ஹெக்டே மகிழ்ச்சி
பூஜா ஹெக்டே நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த "ராதேஷ்யாம்" படம் தோல்வியடைந்த நிலையில் அவர் "பீஸ்ட்" படத்தைத்தான் அதிகம் நம்பியிருக்கிறார். அதனால், அப்படம் குறித்து அடிக்கடி அப்டேட்டுகளைக் கொடுத்து வருகிறார். இன்று "ஜாலி ஓ ஜிம்கானா" படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “செட்டில் உண்மையிலேயே ஜாலி ஓ ஜிம்கானாவாக இருந்ததை நீங்கள் பார்க்க முடியும்,” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்து ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக "பீஸ்ட்" படம்தான் இருக்கிறது. படத்திற்கான வியாபாரமும், தியேட்டர்கள் ஒப்பந்தம் விறுவிறுப்பாகவும் நடந்து வருவதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!