
ராதே ஷ்யாம் : பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த ஆறுதல்
மார் 20, 2022
Advertisement
பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடித்து திரைக்கு வந்துள்ள ராதேஷ்யாம் படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டது. இதனால் சாஹோ படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு விடலாம் என்று நினைத்த பிரபாஸ் மிகப் பெரிய ஏமாற்றம் அடைந்திருக்கிறார். அதேபோல் பூஜா ஹெக்டே வும் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருபவர், அடுத்த டுத்து தான் நடித்துள்ள படங்கள் இந்த தோல்வியில் இருந்து தன்னை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு, யார் மீதும் அளவுக்கதிகமான நம்பிக்கை வைக்கக்கூடாது என்பதை ராதேஷ்யாம் தனக்கு உணர்த்தி விட்டதாக கூறியுள்ள அவர், படத்தை பார்த்த அனைவரும் எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். அதனால் படம் தோல்வி என்றபோதிலும், எனது நடிப்பை அனைவரும் பாராட்டுவது ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!