புதுமாப்பிள்ளை உமாபதி நடிப்பில் வெளியாகும் பித்தல மாத்தி
ஜூன் 08, 2024
Advertisement
குணசித்ர நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி. பல படங்களில் நாயகனாக நடித்தும் முன்னணி நடிகராக வர முடியவில்லை. இந்த நிலையில் அவர் நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இது ஒரு காதல் திருமணம். சமீபத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. திருமணத்தை பிரமாண்டமாக நடத்த அர்ஜூன் ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த நிலையில் உமாபதி நடித்த "பித்தல மாத்தி" என்ற படம் வருகிற 14ம் தேதி வெளிவருகிறது. இதில் மகனுடன் தம்பி ராமய்யாவும் நடித்துள்ளார். இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பால சரவணன், வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், மாணிக் வித்யா இயக்கி உள்ளார். ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!