
ஜானகி போன்று இந்தியாவிலேயே யாரும் இல்லை: இளையராஜா உருக்கம்
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக வரும் உடல்நல பிரச்னையால் மைசூரில் நேற்று முன்தினம் (ஜூலை 11) காலமானார். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா வருகைக்கு பின் அவரது படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். அவரது மறைவு இளையராஜாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. லண்டனில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா, நிகழ்ச்சி மேடையிலேயே, ஜானகியின் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பிய இளையராஜா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜானகி மறைவு குறித்து அவர் பேசுகையில், ""ஜானகியின் மறைவு பெரும் இழப்பு. அவரைப் போன்ற திரைப்பட பின்னணிப் பாடகி இந்தியாவில் கிடையாது"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்He said the same for Latha Mangeshkar and Asha Bhosle also. Now for S.Janaki.