
‛ஜூராசிக் பார்க் புகழ் ஹாலிவுட் நடிகர் சாம் நீல் காலமானார்
கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றி உள்ளார். திரையில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் தனது கலகலப்பான மற்றும் எளிமையான குணத்தால் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். சினிமா தாண்டி மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
2022ல் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று(ஜூலை 13) காலமானார். அவரது திடீர் மரணம் ஹாலிவுட் மற்றும் உலகளவில் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சாம் நீல்-க்கு 1989ல் ஜப்பானை சேர்ந்த நோரிகோ வடனாபே என்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் மேக்கப் மற்றும் ஹேர் டிசைனர் உடன் திருமணம் நடந்தது. 2017ல் இவர்கள் பிரிந்தனர். இந்த தம்பதியருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!