சிறந்த நடிகர், டெக்னிஷியனுக்கு ஆயிரம் : டிரைன் படப்பிடிப்பில் மிஷ்கின் தந்த பரிசு
ஜூலை 13, 2026
Advertisement
சென்னையில் நேற்று நடந்த மிஷ்கினின் டிரைன் பட விழாவில் நாசர் கலந்து கொண்டு பேசியதாவது, ‛‛நான் எத்தனையோ படங்களில் நடித்து இருந்தாலும், இந்த படம் வித்தியாசமானது. நீண்ட காலத்துக்குபின் ஒரு சண்டைக்காட்சியை, அதுவும் ரயிலில் பண்ணியிருக்கிறேன். எந்த கதை எழுதினாலும் என்னிடம் கொடுத்து படிக்க சொல்வார் மிஷ்கின். இந்த படமும் அப்படியே. என் கல்லுாரி நண்பன் யூகி சேதுவும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். மிஷ்கின் செட்டில் கடுமையாக பேசுவார். என்னிடம் அந்த மைக்குகள் அழுதன"" என்றார்.
கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையிலும், ‛‛நானே செட்டில் அதிகமாக கோபப்படுவேன். ஆனால், என்னை விட மிஷ்கினுக்கு கோபம் அதிகம் வரும் என்கிறார்கள். ஆனால், அதை நேரில் பார்க்கவில்லை என்றார்.
மேலும் சென்னையில் ரயில் பெட்டி செட் அமைத்து இந்த படத்தை படமாக்கி இருக்கிறார்கள். பார்த்திபனின் இவன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பவுசியா புதுவித கேமராவால் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தினமும் சிறந்த நடிகருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு, சிறப்பாக செயல்படும் டெக்னிஷியனுக்கு ஆயிரம் பரிசு என திட்டம் வைத்து படப்பிடிப்பை நடத்தினாராம் மிஷ்கின்.
விழாவில் பேசிய பார்த்திபன், ‛‛அடுத்து நான் உள்ளே வெளியே 2 படத்தை இயக்கப் போகிறேன். என்னுடைய இவன் படத்தில் மேக்கப் இல்லாமல் சவுந்தர்யாவை அழகாக காண்பித்த பவுசியா அந்த படத்துக்கும் ஒளிப்பதிவாளர்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!