
பதான் - தமிழில் தப்பும், தவறுமாய் போஸ்டர்
ஷாருக்கான் நடிகராக அறிமுகமாகி நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவர் முதன் முதலில் நடித்த ஹிந்திப் படமான "தீவானா" வெளிவந்து நேற்றுடன் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஷாருக்கின் 30 ஆண்டு கால சினிமாவைக் கொண்டாடும் வகையில் நேற்று "பதான்" படத்தின் போஸ்டரை யாஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டது.
ஹிந்தியில் தயாராகி வரும் இப்படத்தை தெலுங்கு, தமிழிலும் வெளியிட உள்ளனர். தமிழ் போஸ்டர் தப்பும் தவறுமாய் வெளியிடப்பட்டுள்ளது. ஷாருக்கான் என்பதை "ஷாருக்கான" எனவும், இயக்கம் என்பதை "இகை்கம்" எனவும் தவறுதலாக குறிப்பிட்டுள்ளனர். நன்றாகத் தமிழ் தெரிந்த ஒருவரிடம் இது குறித்த வேலையைக் கொடுத்திருக்கலாம்.
தனது 30 வருட திரையுலகப் பயணத்திற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஷாருக்கான். "பதான்" படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!