
3 வாரத்தில் 380 கோடி வசூலித்த விக்ரம்
தமிழ் சினிமாவின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனைகளை முறியடித்து நம்பர் 1 வசூல் படமாக இந்தப் படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த நான்காவது வாரத்திலும் நூற்றுக்கும் அதிகமான தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
மூன்று வார முடிவில் இந்தப் படம் 380 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில 165 கோடி, கேரளாவில் 36 கோடி, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 28 கோடி, கர்நாடகாவில் 20 கோடி, வட இந்தியாவில் 11 கோடி, வெளிநாடுகளில் 120 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியில் இந்தப் படத்தைச் சரியாகக் கொண்டு போய் சேர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அங்கும் படம் சரியாகப் போய் சேர்ந்து வெற்றி பெற்றிருந்தால் 500 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
ஜுலை முதல் வாரத்தில் ஓடிடி தளத்தில் "விக்ரம்" வெளியாக உள்ளது. அங்கும் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!