
டிவி நடிகை ப்ரீத்தியை மணந்த மகிழ்ச்சியில் ‛பசங்க கிஷோர்
மார் 24, 2023
Advertisement
பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கிஷோர். முதல் படத்திலேயே தேசிய விருதுபெற்ற நடிகராக மாறினார். தொடர்ந்து ‛கோலிசோடா" உள்ளிட்ட தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை காதலித்து வந்தார். ப்ரீத்தியை விட கிஷோர் 4 வயது சிறியவர். இதுகுறித்து அப்போது சில விமர்சனங்களும் எழுந்தன. அதேசமயம் தனது காதலில் உறுதியாக இருந்த கிஷோர் "அடுத்த பிறந்தநாளை கணவன் மனைவியாக கொண்டாடுவோம்" என உறுதியாக அறிவித்திருந்தார். அதற்கேற்றார்போல் உற்றார் உறவினர் புடைசூழ கிஷோர் - ப்ரீத்தி திருமணம் கோலாகலமாக முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் கிஷோர் - ப்ரீத்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!