
அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு
அடுத்ததாக ஐதராபாத் நகரில் ஆர்டிசி எக்ஸ் ரோடில் எஎம்பி கிளாசிக் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரைத் திறக்க உள்ளார். மொத்தம் 7 தியேட்டர்கள் அடங்கிய அந்த மல்டிபிளக்ஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது. தெலுங்கு ரசிகர்களிடம் உள்ள சினிமா மோகம் என்றுமே குறைந்ததில்லை. அவர்கள் தியேட்டர்களில் வந்து படம் பார்ப்பதை ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடுவார்கள். அதனால், தியேட்டர்கள் திறப்பது நல்லதொரு வியாபார முதலீடுதான்.
மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!