தசரா போட்டியில் ஜெயிலர் 2, ரணபாலி
அக் 09, 2026
Advertisement
2026ம் ஆண்டிற்கான நவராத்திரி திருவிழா அக்டோபர் 11ம் தேதி ஆரம்பமாகி, அக்டோபர் 20ம் தேதி முடிகிறது. ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா பண்டிகை என்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தொடர் விடுமுறை நாட்களாக வரும் இந்த பண்டிகைநாளில் புதிய படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடப் பண்டிகையை முன்னிட்டு தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் 2" படமும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள "ரணபாலி" படமும் வெளியாக உள்ளன.
அக்டோபர் 15ம் தேதி வெளியாகும் "ஜெயிலர் 2", படம் 2023ல் வெளிவந்த "ஜெயிலர்" படத்தின் இரண்டாம் பாகமாக வருகிறது. முதல் பாகம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள நிலையில், இரண்டாம் பாகம் அந்த வசூலையும் முறியடித்து, 1000 கோடி வசூலைத் தொடுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இப்படத்தில் இணைந்துள்ள நடிகர்களால் இப்படம் பான் இந்தியா அளவில் ரசிக்கப்படும் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் "ரணபாலி" படம், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஆகியோர் திருமணம் செய்து கொண்டதற்குப் பிறகு வெளியாகும் முதல் படமாக வரப் போகிறது. சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்திய சரித்திரப் படமாக உருவாகியுள்ள இந்தப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய், ராஷ்மிகா இருவருமே இந்திய அளவில் பிரபலமாக உள்ளவர்கள். இந்தப் படமும் பான் இந்தியா படமாகவே வெளியாகப் போகிறது.
அவரவர் மொழி மாநிலங்களிலும் இரண்டு படங்களுக்கும் அதிக தியேட்டர்கள் கிடைப்பது நிச்சயம். அதேசமயம் அக்டோபர் 16ல் ஹிந்தியில் வெளியாக உள்ள "பிரஹார், நயி நவேலி" ஆகிய படங்களும் வட இந்தியாவில் தியேட்டர்களைப் பெறுவதில் சற்றே போட்டியை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!