பஞ்சாயத்தை நோக்கி லைகர் நஷ்டப் பிரச்சினை
செப் 12, 2022
Advertisement
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த "லைகர்" படம் எதிர்பாராத விதமாக படுதோல்வியைத் தழுவியது. மற்ற மொழிகளில் அப்படியிருந்தாலும் தெலுங்கில் மட்டுமாவது தப்பிக்காதா என எதிர்பார்த்தார்கள். விஜய் தேவரகொண்டாவின் முந்தைய சில மோசமான படங்களை விடவும் இந்தப் படம் மோசமாக வசூலித்தது. சீக்கிரமே தியேட்டர்களை விட்டும் தூக்கப்பட்டது.
படத்தை வாங்கிய தெலுங்கு வினியோகஸ்தர்கள் நஷ்டத் தொகையைக் கேட்டு வருகிறார்களாம். ஆனால், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக சார்மி கவுர் தர மறுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தை சந்தித்து தங்கள் பிரச்சினையை வினியோகஸ்தர்கள் பேச உள்ளார்களாம். அதிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால் தெலுங்கு சேம்பரில் முறையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!