
சினிமாவை சீரிஸாக எடுத்துக் கொள்ளாதீங்க, நாங்க ஒன்னுமே இல்ல : அஜித் பாணியில் யஷ் அட்வைஸ்
இந்த நிகழ்ச்சியில் பேசிய யஷ், ‛‛சினிமாவை ரொம்ப சீரிஸாக எடுத்துக் கொள்ளாதீங்க. நாங்கள் எல்லாம் ஒன்னுமே இல்லை. வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை கனவாக கொண்டு உழையுங்கள். உங்கள் கனவு நிஜமாகும்போது வெற்றியும், மரியாதையும் தானாகவே உங்களைத் தேடி வரும். ஏதாவது ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்தால் உடனே உலகத்தை குறை சொல்லாதீர்கள், அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு"" என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார்.
பொதுவாக அஜித் தனது ரசிகர்களுக்கு இதுபோன்று அட்வைஸ் வழங்குவார். சினிமா பாருங்கள், அதேசமயம் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், நன்றாக படியுங்கள், பெற்றோரை, குடும்பத்தை பாருங்கள் என்பார். இப்போது அதே பாணியில் யஷ் பேசியிருப்பது வலைதளங்களில் வைரலானது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!