
செப்டம்பர் 1 முதல் படம் ரிலீஸ் இல்லை : வெறும் மிரட்டலா...? பேச்சுவார்த்தை நடக்குமா?
இந்த அறிவிப்பால் பல தயாரிப்பாளர்கள், பல நடிகர்கள், பல இயக்குனர்கள் கதி கலங்கி போய் இருக்கிறார்கள். செப்டம்பர் 1 முதல் ஸ்டிரைக் என்றால் பல கோடி இழப்பு ஏற்படும். பல படங்கள் ரிலீஸ் ஆகாது, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டால் பெரிய இழப்பு ஏற்படும் என்கிறார்கள். ஆனால், இன்னொரு தரப்போ இது ஒருவகை மிரட்டல்.
தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அந்த அறிக்கையிலே கூறியுள்ளது. அதனால், தமிழக அரசு அல்லது அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை சார்பில் அனைத்து சினிமா சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். சினிமா துறையை சேர்ந்தவர் முதல்வர், அதே துறையை சேர்ந்த ராஜ் மோகன். அந்த துறையின் அமைச்சர் ஆகவே சினிமா ஸ்டிரைக் நடக்காது. அது நடந்தால் அரசுக்கு கெட்டப்பெயர். எனவே, விரைவில் அதற்காக பேச்சுவார்த்தை நடக்கும் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!