
சென்னையில் தான் என் திரையுலக போராட்டம் துவங்கியது : ரவி தேஜா
இந்த படத்திற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய ரவி தேஜா, ‛‛எனக்கு தமிழ் மொழி மீது பெரிய ஈர்ப்பு உண்டு. தமிழ் மொழி மற்றும் அந்த நையாண்டி பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது திரையுலக போராட்டம் 90களில் மத்தியில் சென்னையில் தான் துவங்கியது. உண்மையில் இந்தப்படம் இதயத்தை தொடக்கூடியது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து சின்ன பிள்ளைகள், ஆண்கள் அழுகிறார்கள்.
இந்த படத்தில் என் மகளாக நடித்த நட்சத்திராவுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது. பிரியா உடன் பணியாற்றியது சிறந்த அனுபவம், எதார்த்தமான ஒரு நடிகை. இந்த படம் கண்டிப்பாக ஜெயிக்கும் என இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சிவா நிர்வானாவிடம் சொன்னேன். அது நடந்துள்ளது"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!