
ஏப்ரல் 9ல் வெளியாகும் தி லெஜண்ட்பட பாடல் !
ஏப் 08, 2022
இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் புதிய படம் ஒன்றில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் . தி லெஜண்ட்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!