ஜனவரி 26ல் லால் சலாம் இசை வெளியீடு
ஜன 23, 2024
Advertisement
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், விக்ராந்த் கதாநாயர்களாக நடிக்க, சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் "லால் சலாம்".
இப்படத்தின் இசை வெளியீடு வரும் ஜனவரி 26ம் தேதி மாலை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு "குட்டி கதை" சொல்வார் என அறிவித்துள்ளார்கள். இதற்கு முன்பு தான் நடித்த "ஜெயிலர்" படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் சொன்ன "காக்க, கழுகு" கதை சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் அவரது ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் மோதல் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
"லால் சலாம்" இசை வெளியீட்டில் என்ன குட்டி கதை சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தப் போகிறாரோ ?.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!