
பாவாடை தாவணியில்….. பீஸ்ட் பூஜா ஹெக்டேவா இது ?
"பீஸ்ட்" கதாநாயகியான பூஜா ஹெக்டே, கர்நாடகாவைச் சேர்ந்தவர், மும்பையில் செட்டிலானவர். எப்போதுமே கிளாமரான மாடர்ன் உடையில்தான் போட்டோஷுட் செய்வார். நேற்று பாவாடை தாவணியில் ஒரு போட்டோ ஷுட் எடுத்து புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். தென்னிந்தியப் பெண்களுக்கே உரிய அழகு அந்த ஆடையில் வெளிப்பட்டது.
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். ஹிந்தியில் பிரபலமாகத் துடிக்கும் பூஜா, மீண்டும் தமிழ்ப் பக்கம் வருவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!