மீண்டும் அதே கூட்டணியில் அயலான் 2
ஜன 23, 2024
Advertisement
ரவிக்குமார், சிவகார்த்திகேயன் இணைந்த "அயலான்" படம் பொங்கலுக்கு வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த வாரம் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கப் போவதாக படத்தில் விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்த பான்டம் எப்எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜனவரி 18, 2024ம் தேதியன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. "அயலான் 2" படத்தின் விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் தனியாக முதல்கட்டமாக 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு சிறப்பாக அமையும் போது அந்தத் தொகை இன்னும் அதிகமாக்கப்படுமாம்.
"அயலான்" படத்தின் வெற்றியின் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார், தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் மீண்டும் இணைய முடிவெடுத்துள்ளனராம். "அயலான்" படத்தில் இடம் பெற்ற ஏலியன் "டாட்டூ" பார்வையாளர்கள் மத்தியில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது. இரண்டாம் பாகத்தில் மிகச் சிறப்பான காட்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்களது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாரா, படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் போன்ற விவரங்கள் "அயலான் 2" படத்தின் துவக்க விழாவின் போது தெரிய வரும்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!