
ஜனவரி 26ல் லால் சலாம் இசை வெளியீடு
இப்படத்தின் இசை வெளியீடு வரும் ஜனவரி 26ம் தேதி மாலை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு "குட்டி கதை" சொல்வார் என அறிவித்துள்ளார்கள். இதற்கு முன்பு தான் நடித்த "ஜெயிலர்" படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் சொன்ன "காக்க, கழுகு" கதை சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் அவரது ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் மோதல் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
"லால் சலாம்" இசை வெளியீட்டில் என்ன குட்டி கதை சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தப் போகிறாரோ ?.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!