
மது கோப்பை உடன் காஜல் - கவுதம் கிச்சுலு
ஜன 20, 2021
Advertisement
இந்தியன்-2, ஹேய் சினாமிகா மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், கடந்த ஆண்டு அக்டோபரில் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், 3 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அரட்டையடிக்கத் தொடங்கியிருக்கும் காஜல், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய காதலரான கவுதம் கிச்சுலுவுடன் தான் டேட்டிங் செய்த ஆரம்ப கால படங்களையும் பகிர்ந்துள்ளார். அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விருந்து நிகழ்ச்சியில் எடுத்த போட்டோ இது என்று தெரிவித்துள்ளார். அந்த போட்டோவில் காஜல் அகர்வாலும், கெளதம் கிச்சுலுவும் கையில் மது கிளாஸ் வைத்திருக்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!