
மகள் அனந்திதா பற்றி குஷ்பு டுவீட்
இந்நிலையில், தனது மகள்களான அவந்திகா, அனந்திதா ஆகியோரின் புகைப்படங்களை அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார் குஷ்பு. தற்போது தனது இளைய மகள் அனந்திதாவின் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, எனது சிறிய தேவதை அனந்திதா சுந்தரின் சிரிப்பு தொடர்ந்து என்னை ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறது. உத்வேகம் மற்றும் வழிகாட்டும் சக்தியாக இருக்கிறாள். என் பொம்முக்குட்டி அம்மாவை நான் நேசிக்கிறேன். ஐ லவ் யூ என்றும் பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டில் நிறைய அன்பு, இதயம், முத்தங்கள், உதடுகள் மற்றும் அரவணைப்பு ஈமோஜிகளை சேர்த்துள்ளார் குஷ்பு.
இந்த டுவீட் சோசியல் மீடியாவில் நிறைய பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதோடு அடுத்த கதாநாயகி ரெடியாகிவிட்டார் என சிலர் பதிவிட்டுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!