கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால்
மே 20, 2024
Advertisement
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக விஷ்ணு மஞ்சு தயாரித்து, நடிக்கும் படம் "கண்ணப்பா". இது 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக இதனை தயாரிக்கிறார் விஷ்ணு மஞ்சு. மோகன் பாபு, பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், சரத்குமார் உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். முகேஷ் குமார் சிங் இயக்குகிறார்.
தற்போது இந்த படத்தில் காஜல் அகர்வால் இணைந்திருக்கிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "மொசகல்லு" என்ற படத்தில் காஜல் அகர்வாலும், விஷ்ணு மஞ்சுவும் அண்ணன், தங்கையாக நடித்திருந்தார்கள். இப்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்கள். காஜல் அகர்வால் நடிக்கும் கேரக்டர் பற்றி அறிவிக்கப்படவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!