
அதை மட்டும் சொல்லக்கூடாது பிக்பாஸ் குறித்த கேள்விக்கு நிழல்கள் ரவியின் பதில்
செப் 22, 2021
Advertisement
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருபவர் நிழல்கள் ரவி. இவர் பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் போது "பிக்பாஸில் இம்முறை கலந்து கொள்கிறீர்களா"? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள நிழல்கள் ரவி, “பிக் பாஸ் அழைப்பு எனக்கு வந்திருக்கிறது. நான் வருகிறேனா என்பது சஸ்பென்ஸ். அதை வெளியில் சொல்ல கூடாது என சொல்லி இருக்கிறார்கள்” என கூறினார். இதனால் இந்த சீசனில் நிழல்கள் ரவி கலந்துகொள்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!