
மேக்னா ராஜ் மறுமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில் மேக்னா இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், பிக்பாஸ் 4 கன்னட டைட்டில் வின்னர் பிரதாமை தனது வருங்கால கணவராக தேர்ந்தெடுத்ததாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு பிரதாம் தனது சமூக ஊடகங்களில் பதிலளித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் கன்னட மொழியில் இது குறித்து டுவீட் செய்துள்ள பிரதாம், "நான் இதை புறக்கணிக்க நினைத்தேன்!! ஆனால் இந்த செய்தி 2.70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. யூடியூப் சேனல்கள் பார்வைகள் மற்றும் பணத்திற்காக தரம் குறைவாக இருக்கும்போது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நினைக்கிறேன். இதுபோன்ற வீடியோக்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்போது மற்ற சேனல்களுக்கு அது ஒரு பாடமாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!