
அவசியம் என்றால் ஆடை இல்லாமலும் நடிப்பேன் : ஸ்வேதா மேனன்
பிப் 13, 2024
Advertisement
மலையாள நடிகையான ஸ்வேதா மேனம், தமிழில் சினேகிதியே, நான் அவனில்லை-2, சாதுமிரண்டால் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தான் நடித்துள்ள பெரும்பாலான படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கும் ஸ்வேதா மேனன் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னை கவர்ச்சி நடிகை என்று பொதுப்படையாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான வேடங்களில் நடக்கிறேன். அந்தந்த கேரக்டருக்கு எந்த மாதிரி உடை அணிய வேண்டும் என்று கூறுகிறார்களோ அதை அணிந்து நடித்து வருகிறேன். மேலும், பிகினி உடை அணிந்து நடிக்க வேண்டும் அல்லது ஆடையே இல்லாமல் நடிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதுபோன்று நடிக்க தயாராக இருக்கிறேன். காரணம் அதுதான் சினிமா. நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கதாபாத்திரங்கள் தான் முடிவு செய்கின்றன என்று கூறியிருக்கிறார் ஸ்வேதா மேனன்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!