
பெத்தி முதல் பரிமளா அண்ட் கோ வரை : இந்த வார வெளியீடு...!
பெத்தி
தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண், சிவராஜ் குமார், ஜெகபதிபாபு, ஜான்விகபூர், பொமன் இரானி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "பெத்தி". இந்த திரைப்படம் நேற்று (ஜூலை 9) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பரிமளா அண்ட் கோ
இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு, சாண்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "பரிமளா அண்ட் கோ". இந்த படம் இன்று (ஜூலை 10ம் தேதி) ஜீ5 தளத்தில் வெளியானது.
சிங் கீதம்
93 வயதில் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "சிங் கீதம்". இசையை மையமாக வைத்து வெளியான இந்த திரைப்படம் நேற்று (ஜூலை 9ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
லேண்ட் ஆப் புட்பால்
மலையா இயக்குநர் ஹசீப் ஹக்கீம் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் "லேண்ட் ஆப் புட்பால்". இந்த தொடர் இன்று (ஜூலை 10ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
பல்டி
மலையாள நடிகர் ஷேம் நிகம் நடிப்பில் வெளியான திரைப்படம் "பல்டி". கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல மாதங்களுக்கு பின் இந்த படம் இன்று (ஜூலை 10ம் தேதி) சோனி லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது.
டோஸ் (Dose)
மலையாள இயக்குநர் அபிலாஷ் ஆர். நாயர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "டோஸ் (Dose)". சிஜு வில்சன், ஜெகதீஷ் மற்றும் அஷ்வின் கே. குமார் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் இன்று (ஜூலை 10ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
டபுள் ஆக்குபன்சி
அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்நாதவன், ரேஸ்மா நடிப்பில் கடந்த ஜூன் 12ல் வெளியான படம் ‛டபுள் ஆக்குபன்சி". பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் மாறும் வித்தியாசமான கதை. காதல், காமெடியாக வெளியான இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் இன்று(ஜூலை 10) வெளியாகி உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!