
50வது நாளில் மொத ராத்திரி
ஓடிடி தளத்தில் 20 நாட்களுக்கு முன்பு வெளியான பின்பும் இன்னும் சில தியேட்டர்களில் சில காட்சிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இப்படம் நாளை 50வது நாளைத் தொடுகிறது. இதற்கான சிறிய விழா ஒன்று நாளை சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெற உள்ளது.
இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்த்த பின்பும் பல ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். இப்படத்தில் நாயகனாக நடித்த ரிஷிகாந்த் நடித்து அடுத்து வெளிவந்த "டோரதி" படம் வரவேற்பைப் பெற்றதால் அவர் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களில் சில படங்கள் எதிர்பாராத வெற்றியைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளன. அதில், "மொத ராத்திரி" படமும் உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!