பிளாஷ்பேக் : சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அனுராதா
டிச 20, 2024
Advertisement
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகவும், ஒரு பாடலுக்கு ஆடியவருமான அனுராதா ஒருசமயம் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார் என்பது சுவாரஸ்மான தகவல். ஒரு காலத்தில் வெள்ளிவிழா படங்களாக கொடுத்த ஸ்ரீதர், தன் கடைசி காலத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்தார். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று "மோகன புன்னகை". இந்த படத்தில் சிவாஜி நாயகனாக நடித்தார். அவர் காதலிக்கும் பெண்களாக கீதா, பத்மபிரியா, ஜெயபாரதி, மற்றும் அனுராதா நடித்தனர்.
சிவாஜியை ஒரு தலையாக அனுராதா காதலிப்பார். ஆனால் சிவாஜி தனக்கு பல காதல் தோல்விகள் இருந்ததால் அதனை மறுத்து இன்னொருவருக்கு அனுராதாவை திருமணம் செய்து வைப்பார். இந்த படத்தில் இவர்களுடன் மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், சின்னி பிரகாஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். பெரும்பாலான படம் இலங்கையில் படமாக்கப்பட்டிருந்தது. படத்தின் கதை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. படமும் தோல்வி அடைந்தது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!