பிளாஷ்பேக்: காலம் மறந்து விட்ட இசை ஜீவன்
மே 07, 2025
Advertisement
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் "நான் அடிமை இல்லை". படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற ‛ஒரு ஜீவன்தான் உன்னோடுதான் ஓயாமல் ஒலிக்கின்றதே..." என்ற பாடல் இன்றைக்கு மனதை உருக்கும் கீதமாக காற்றில் உலவிக் கொண்டிருக்கிறது. இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் விஜய் ஆனந்த் என்கிற ஜீவனை சினிமா மறந்து விட்டது.
விசு இயக்கத்தில் 1984-ல் வெளியான "நாணயம் இல்லாத நாணயம்" என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக விஜய் ஆனந்த் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்தார். ஊருக்கு உபதேசம், வெற்றி மேல் வெற்றி, சட்டம் ஒரு இருட்டறை, காவலன் அவன் கோவலன், உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கன்னட திரைப்படங்களையும் சேர்த்து 180க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி 2 ஆங்கில ஆல்பம் பாடலுக்கும் இவர் இசையமைத்துள்ளார்.
இப்படி தொடர்ந்து இசை அமைத்து வந்தவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் நின்று போனது. பல வருடங்கள் வீட்டில் முடங்கி கிடந்தவர் கடந்த ஆண்டு தனது 71வது வயதில் காலமானார். அவர் மரண செய்தி கூட சில வரி செய்திகளாக கடந்து போனது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!