
ஆபரேஷன் சிந்தூர் : சினிமா பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும்
ரஜினிகாந்த்
“போராளியின் சண்டை ஆரம்பமாகிவிட்டது. பணி முடியும் வரை நிறுத்த வேண்டாம். மொத்த நாடும் உங்களுடன் உள்ளது,” என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை "டேக்" செய்து தனது ஆதரவைத் ரஜினி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாத செயல்களால் பிளவுபடாத ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது. இந்திய அரசு எடுத்த தீர்க்கமான மற்றும் திறன்மிக்க ராணுவ நடவடிக்கையை நான் மெச்சுகிறேன். ஜெய்ஹிந்த்,” என முப்படையினரின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படத்தைப் பகிர்ந்து கமல் பாராட்டியுள்ளார்.
விஜய்
நடிகரும், தவெக தலைவருமான விஜய், “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன்
“இந்திய ராணுவனத்தின் முகம் இதுதான்… ஜெய்ஹிந்த்,” என "ஆபரேஷன்சிந்தூர்" ஹேஷ்டேக்கையும் இணைத்து சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
ஏஆர் ரஹ்மான்
வார்த்தைகளில் எதுவும் குறிப்பிடாமல், புறா, ஹாட்டின், தேசியக்கொடி ஆகியவற்றை எமோஜி வடிவில் இசையமைப்பாளர் ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
தனுஷ்
பயங்கரவாதத்திற்கு எதிராக நமது நாடு ஒன்றுபட்டு நிற்கிறது. நமது ஆயுதப் படைகளை நினைத்து பெருமை கொள்வோம், ஜெய்ஹிந்த்,” என தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இளையராஜா
மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி... ஆபரேஷன் சிந்தூர் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!