
ஜெயிலர் 2வில் நீக்கப்பட்ட சந்தானத்தின் காட்சிகள் ஓடிடியில் வெளியாகிறதா?
குறிப்பாக நடிகர் சந்தானத்தின் காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. அவர் இந்த விழாவை ஒருங்கிணைக்கும் நபராக நடித்திருந்தார். இருப்பினும், படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால், அந்த காட்சியைச் சுருக்கமாக வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.
படப்பிடிப்பு தளத்தில் வித்யா பாலனின் பிறந்தநாளைக் கொண்டாடும் பிடிஎஸ் கிளிப்ஸ் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழு உடன் சந்தானமும் இடம் பெற்றுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், நீக்கப்பட்ட காட்சிகளுடன் கூடிய முழுமையான பதிப்பை ஓடிடி தளத்தில் வெளியிடுமாறு தயாரிப்பாளர்களுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேசமயம் ஜெயிலர் 3யில் சந்தானம் காட்சிகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!