
மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாராவுக்கு 60 அடியில் கட் அவுட்
நயன்தாராவின் கட் அவுட் மூலம் இப்படம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்கில் நயன்தாராவிற்கு 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நடிகைக்காக வைக்கப்பட்டதிலேயே இதுதான் மிக உயரமான கட் அவுட் என்று கூறப்படும் நிலையில், இதன் உயரம் அனைவரையும் ஈர்த்துள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக இது ஒரு விளம்பர உத்தியாக மாறியுள்ளது.
இப்படம் தெலுங்கில் மகாசக்தி என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு இதுவரை பெரிதாக இல்லாததால், படக்குழுவினர் வரவிருக்கும் நாட்களில் விளம்பரப் பணிகளை தீவிரப்படுத்த உள்ளனர். இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், அஜய் கோஷ், ஊர்வசி, அபிநயா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…