பிளாஷ்பேக்: நாடகத்தால் வெற்றி பெற்ற படம்
பிப் 21, 2026
Advertisement
பிரபல தெலுங்கு இயக்குனர் சே.நாராயணமூர்த்தி இயக்கிய படம் "அன்னையின் ஆணை". சிவாஜி 2 வேடங்களில் நடித்த படங்களில் முக்கியமானது. அவருடன் சாவித்ரி, நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.ராஜம், பண்டரிபாய் உள்ளிட்ட பலர் நடித்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். தந்தையை கொன்றவனை கண்டுபிடிக்கும் மகனின் கதைதான் என்றாலும் அதை புதிய கோணத்தில் சொன்ன வகையில் இந்த படம் தனித்து நின்றது.
அப்போதெல்லாம் சிவாஜி நடிக்கும் முக்கிய படங்களில் படத்திற்குள் அவர் ஒரு சரித்திர நாடகத்தில் நடிப்பது வழக்கம். அப்படி இந்தப் படத்தில் அவர் சாம்ராட் அசோகனாக நடித்திருந்தார். சிவாஜி சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மேடையில் அதிகம் நடித்த நாடகங்களில் இதுவும் ஒன்று. அந்த நாடகத்தின் முக்கிய காட்சியான போர்களத்தில் நிற்கும் அசோகருக்கு அங்கு வரும் புத்த துறவி போரின் கொடுமையையும, உயிர்களின் மகத்துவத்தையும் எடுத்துரைப்பார் அதன் பிறகு அசோகர் புத்த மதத்தை ஏற்பார். இந்த காட்சி படத்தில் இடம்பெற்றது.
இந்த நாடகத்தை பார்ப்பதற்காகவே "அன்னையின் ஆணை" படத்திற்கு மக்கள் படையெடுத்தார்கள். நாடகம் முடிந்ததும் எழுந்து போய்விடுவார்கள். இதனால் படத்தை வெளியிட்ட பல தியேட்டர்கள். "சாம்ராட் அசோகன் நாடகம் இரண்டு முறை திரையிடப்படும்" என்று விளம்பரம் செய்தார்கள். படத்தோடு ஒரு முறையும் படம் முடிந்த பிறகு ஒரு முறையும் நாடகத்தை திரையிட்டடார்கள். இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!