
அட்லி - அல்லு அர்ஜூன் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய பிரித்விராஜ்
ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து "ஜவான்" படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி. அதைத் தொடர்ந்து, மீண்டும் தமிழுக்கு வராமல், தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் "ராக்கா" என்கிற படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை தீபிகா படுகோன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படம் சயின்ஸ் பிக்ஷன் மற்றும் பேன்டஸி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகிறது. இந்த நிலையில், நடிகர் பிரித்விராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் ஹிந்தியில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாக இருக்கும் தாய்ரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். அல்லு அர்ஜூனுடன் இணைந்து பணியாற்றுவது நீண்ட நாள் கனவு என்றும், அவருடன் திரையைப் பகிர்வது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2023ல் தெலுங்கில் வெளியான "சலார்" படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக நடித்திருந்தார் பிரித்விராஜ். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் பிரித்விராஜ், அல்லு அர்ஜூன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தெலுங்கு திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு உருவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!