ஒளியை உணர்கிறேன் : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன்
மே 01, 2024
நடிகை ஸ்ருதிஹாசன் அவரது இரண்டாவது காதலரான சாந்தனு ஹசரிகாவுடன் நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு திடீரெனப் பிரிந்துவிட்டார். எப்போது திருமணம் செய்வது என்பது குறித்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற தகவல் வெளியானது.
மும்பையில் ஒரு அபார்ட்டிமென்ட்டில் வசித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவரது தங்கை அக்ஷரா ஹாசனும் மும்பையில்தான் இருக்கிறார். நேற்று தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “நான் ஒளியை உணர்கிறேன். இந்தத் தருணங்களுக்காக நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக, நன்றியுள்ளவளாக உணர்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
காதலருடன் இத்தனை நாள் வாழ்ந்ததை இருட்டில் உள்ளதைப் போன்று குறிப்பிடவே, தற்போது "நான் ஒளியை உணர்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார் போலிருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!