
ஆஷா போஸ்லேவை போற்றும் ஏஆர் ரஹ்மானின் மியூசிக் வீடியோவில் ரஜினி, கமல்
ஆஷா போஸ்லேவின் நினைவைப் போற்றும் வகையில் இசை உலகில் அவரது பங்களிப்பையும் கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சிறப்பு வீடியோ ஒன்றை உருவாக்குகிறார். அத்துடன் நினைவஞ்சலி நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்திய அளவில் பல்வேறு திரையுலகினர் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சல்மான்கான், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ள ரஹ்மான், ‛‛கோடிக்கணக்கான ரசிகர்களால் நேசிக்கப்படும் ஒரு ஜாம்பவானை மற்றொரு ஜாம்பவான் கவுரவிப்பது உண்மையில் சிறந்த தருணம். நன்றி ரஜினி சார்"" என குறிப்பிட்டுள்ளார்.
இதேப்போல் கமல்ஹாசன், சல்மான்கான், கரண் ஜோஹர் ஆகியோரும் இந்த மியூசிக் வீடியோ மற்றும் நிகழ்ச்சியில் இணைவதை குறிப்பிட்டு அவர்களுக்கும் தனித்தனியாக நன்றி சொல்லி உள்ளார் ரஹ்மான்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!