
ரஜினியின் ‛கூலி படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
இந்த டீசரில் எம்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற ‛நினைத்தாலே இனிக்கும்" பட பாடல் வரிகள் ரஜினி பேசும் வசனங்களாக இடம் பெற்று இருந்தது. அதோடு அந்த டீசரில் ரஜினியின் ‛தங்க மகன்" படத்தில் இடம் பெறும் ‛வா வா பக்கம் வா..." பாடலின் இசையும் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் வா வா பக்கம் வா பாடலின் இசையை பயன்படுத்தி இருப்பதாக கூறி, ‛கூலி" படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இளையராஜா. அதில் அனுமதி பெறாமல் பயன்படுத்திய அந்த பாடலின் இசையை நீக்க வேண்டும், இல்லையேல் படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புரிமை பிரச்னை தொடர்பாக சமீபகாலமாக இளையராஜா செய்து வரும் நடவடிக்கைகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பையும், பேசு பொருளையும் ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்து இளையராஜாவை பாடலாசிரியர் வைரமுத்து மறைமுகமாக விமர்சித்தது, அதற்கு கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக கண்டன வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!