
டோரதி : பாராட்டிய மம்முட்டி
திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் இப்படத்தைப் பார்த்துப் பாராட்டி வருகிறார்கள். மலையாளத் திரையுலகத்தின சீனியர் நடிகரும், தமிழிலும் அவ்வப்போது நடிக்கும் நடிகர் மம்முட்டி இப்படத்தைப் பார்த்துப் பாராட்டி இருக்கிறார்.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோரை அழைத்து அவர் பாராட்டியுள்ளார். இத்தகவலை கார்த்திக் சுப்பராஜ், புகைப்படங்களுடன் பகிர்ந்து, “மம்முட்டி சார், உங்கள் நேரத்திற்கும், வாழ்த்துகளுக்கும் "டோரதி" குறித்த உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி. இது எனக்கு மிகவும் முக்கியமானது சார். நீங்கள் எப்போதும் ஒரு இன்ஸ்பிரேஷன் தான் சார்,” எனப் பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!