
டேர் டெவில் தொடர் படப்பிடிப்பு : அஜித்தின் அன்புக் கட்டளை
படப்பிடிப்பை முதலில் சென்னையில் தான் நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால், மழைக்காலம் என்பதால் ஐதராபாத்தைத் தேர்வு செய்துள்ளார்கள். இடையில் அனிருத்தின் திருமண வரவேற்பிற்காக மட்டும் அஜித் சென்னை வந்து மீண்டும் ஐதராபாத் சென்றுவிட்டார்.
டிசம்பர் மாதக் கடைசி வரை தொடர்ந்து அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அஜித்தின் மனைவி ஷாலினி இப்படத்தைத் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்கக் கூடாது, அனைத்தும் மிகச் சரியாக நடக்க வேண்டும் என்று அஜித் அன்புக் கட்டளை இட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். அதன்படியே அனைத்தும் நடந்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…