ஹிந்தி படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய தனுஷ்
மார் 15, 2025
Advertisement
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் அவ்வப்போது ஹிந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். "ராஞ்சனா, ஷமிதாப், அத்ராங்கி ரே" படங்களுக்குப் பிறகு தனுஷ் தற்போது நடித்து வரும் ஹிந்திப் படம் "தேரே இஷ்க் மெய்ன்".
"ராஞ்சனா, அத்ராங்கி ரே" படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். கிரித்தி சனோன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நேற்றைய ஹோலி கொண்டாட்டத்தை இயக்குனர் ஆனந்த், தனுஷ், கிரித்தி ஆகியோர் இணைந்து கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கிரித்தி, “லைட்ஸ், கேமரா, ஹோலி… நிறங்கள் குறைந்தாலும் காதல் அதிகம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல ஹிந்தி நடிகர்கள், நடிகைகள் அவர்களது ஹோலி கொண்டாட்டப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!