
சிரஞ்சீவிக்கு யுகே பார்லிமென்ட்டில் பாராட்டு
"பிரிட்ஜ் இந்தியா" அமைப்பும், சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. இது சினிமாவிற்காக மட்டுமல்லாமல், பொது சேவைக்காகவும், கலாச்சார தலைமைத்துவத்திற்காகவும் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் யுகே குடியுரிமை சிரஞ்சீவிக்கு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதை அவரது குழுவினர் மறுத்தனர். செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது சிரஞ்சீவிக்கு பாராட்டும், விருது வழங்குவதும் நடைபெற உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!