ப்ரோ கிளப் ஆக மாறும் ப்ரோ கோட் ?
மார் 14, 2026
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், அபரது பெயரிலேயே ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் படமாக "ப்ரோ கோட்" என்ற படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டு ஒரு அறிமுக வீடியோவையும் வெளியிட்டார்கள்.
ஆனால், "ப்ரோ கோட்" என்ற பெயரில் தலைப்பு வைக்கக் கூடாது என மதுபான விற்பனை நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது. அதன்பின் இரு தரப்பும் பேசி பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியது. "ப்ரோ கோட்" வீடியோவிலும் "புரொடக்ஷன் நம்பர் 1" என தற்காலிகப் பெயரை வைத்தனர்.
இந்நிலையில் படத்திற்கு "ப்ரோ கிளப்" என்ற பெயரை வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பெயருக்கு வேறு எந்த விதத்திலும் மீண்டும் வழக்கு வந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்த பின்பு படத்தின் பெயரை அறிவிக்க உள்ளார்களாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!