
தாராவால் புலம்பும் தயாரிப்பாளர்கள்
அக் 27, 2024
Advertisement
கடந்த காலங்களில் பாலிவுட், "காஸ்டியூமர்"களை தனக்கு நியமித்து, அதற்கான பட கூலியை தயாரிப்பாளர்களை கொடுக்க வைத்து வந்தார், தாரா நடிகை. ஆனால், திருமணத்திற்கு பிறகு, தன், இரண்டு மகன்களையும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து செல்பவர், அன்றைய தினம் அவர்களுக்கான மொத்த செலவையும் தயாரிப்பாளர் தலையிலே கட்டுகிறார். மேலும், இரண்டு மகன்களையும் பராமரிக்க வரும் ஆயாக்களுக்கும் தயாரிப்பாளர்களையே சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கெடுபிடி செய்கிறார்.
இதனால், "இவருக்கே பல கோடிகள் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில், "எக்ஸ்ட்ரா" இன்னும் சில கோடிகளை கொடுக்க வேண்டியதிருக்கே..." என, தாரா நடிகையை வைத்து படம் தயாரிப்பவர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!