
ரீ-ரிலீஸ் ஆகும் தோனி படம்
மே 05, 2023
Advertisement
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப்படம் கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் எம்.எஸ்.தோனி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளிவந்தது. இதில் தோனியாக மறைந்த பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். கியாரா அத்வானி, திஷா பதானி, பூமிகா சாவ்லா, அனுபம் கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை தயாரித்தனர். வரவேற்பையும், வசூலையும் இந்தப்படம் அப்போது பெற்றது. இந்த நிலையில் இப்படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருகின்றனர். இந்த படம் வருகின்ற மே 12 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீ ரிலீஸ் செய்வதாக படக்குழுவினர் போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!