
12 ஆண்டுகால திரிஷ்யம் பயணம் குறித்து அபிஷேக் பதக் நெகிழ்ச்சி!
ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் அபிஷேக் பதக் இயக்கியுள்ள படம் "திரிஷ்யம் தி கன்க்ளூஷன்". "திரிஷ்யம்-3" மலையாள படத்தின் ஹிந்தி ரீமேக்கான இப்படம், அக்டோபர் 2ல் திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் அபிஷேக் பதக், இந்த திரிஷ்யம் தொடரின் 12 ஆண்டுகாலப் பயணம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ""இது 12 ஆண்டுகாலப் பயணம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் ஒன்றாக நின்று, இந்த திரிஷ்யம் 3ம் பாகத்தின் பயணத்தை நிறைவு செய்வோம் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். எனக்கு 39 வயதாகிறது. 2ம் பாகத்தின் போது நான் ஷிவாலிகாவை மணந்தேன். இப்போது 3ம் பாகத்தின்போது எனக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். நான் ஒரு தந்தையாகிவிட்டேன். இது மிகவும் உணர்வுபூர்வமானது. திரிஷ்யம்- 2 முதல் ஷிவாலிகா இதில் ஒரு அங்கமாக இருந்து, எனக்கு மன அமைதியையும் ஆதரவையும் அளித்து வருகிறார்"" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திரிஷ்யம் படத்தின் மூன்றாவது உலகிற்குத் திரும்பிய போது, திரைப்படத் தயாரிப்பிற்கு அப்பால் எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இப்பயணத்தின் போது திருமணமாகி, தந்தையாகி வாழ்க்கையின் முக்கிய மைல்கற்களாக கடந்துள்ளேன். திரைப்பட இயக்கத்தின்போது ஏற்படும் அழுத்தங்களைக் கையாள உதவியதற்காக ஷிவாலிகாவின் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார் அபிஷேக் பதக்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!